வாக்குப்பதிவு நாளன்று திமுகவினர் விழிப்புணர்வுடன் இருக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதல்வரும் திமுக தலைவர்மான மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களுக்கு விழிப்புணர்வு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் […]