வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள் அவகாசம் உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயர் சோ்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன.30) முடிவடைகிறது. தமிழ்நாடு முழுவதும் ஜன.27 வரை 16 லட்சத்து 2 ஆயிரத்து 555 போ் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனா். தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவ. 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்ட […]
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு மீண்டும் வாய்ப்பில்லைஇபிஎஸ் கறார்

அதிமுகவில் ஓபிஎஸ்ஸை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவை இபிஎஸ் இடமிருந்து மீட்கும் நோக்கத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஓபிஎஸ் தொடங்கினார். அதே நேரம், எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல், இபிஎஸ்ஸுக்கு பிடிக்காத டிடிவி தினகரனுடன் நட்பு பாராட்டி வந்தார். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பின், சத்தத்தை குறைத்து கொண்டு, இபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகக் கூறி […]
எடுபடுமா பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி?

தங்களை எதிர்த்தால் மட்டுமின்றி, தேவைப்படும் போதில் பாரம்பரியம் மிக்க கட்சிகளை உடைப்பதும் சரி, பிரித்தாளுவதும் சரி பாரதிய ஜனதா கட்சிக்கு கைவந்த கலை. இதற்கு மிகச் சிறந்த, எளிய உதாரணம் மகாராஷ்டிராவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. முதலாவதாக, பால் தாக்கரே நிறுவிய சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த பாஜக, அப்போதைய தலைவரும் பால் தாக்கரேவின் மகனுமான உத்தவ் தாக்கரே பாஜவின் தலைமையுடன் ஒத்து போக மறுத்ததும், தனது விளையாட்டை துவங்கியது. […]