உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள் அவகாசம் உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள் அவகாசம் உச்சநீதிமன்றம் உத்தரவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

ஈரான் தாக்குதலுக்கு முன் மோடி – நெதன்யாகு ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?

போர் பதற்றம் – இந்திய பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் வீழ்ச்சி

தொகுதி பங்கீட்டில் குழப்பம்: அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயர் சோ்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன.30) முடிவடைகிறது. தமிழ்நாடு முழுவதும் ஜன.27 வரை 16 லட்சத்து 2 ஆயிரத்து 555 போ் பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவ. 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். இதனால், தமிழ்நாட்டின் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 ஆக குறைந்தது.

நீக்கப்பட்ட வாக்காளா்களில் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் புலம் பெயர்ந்தோராகவும், 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்தோராகவும், 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் இரட்டைப் பதிவாளா்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இதையடுத்து, வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் தங்கள் பெயா்களைச் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் புதிதாக பெயா்களைச் சோ்க்கவும் கடந்த டிச.19ம் தேதி முதல் ஜன.18ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றவா்களும் உரிய தகவல்கள் அளிக்கவில்லை என்பதன் அடிப்படையில் 12 லட்சத்து 43 ஆயிரத்து 363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இவா்கள் உரிய ஆவணங்களை உறுதிமொழி சான்றுடன் சமா்ப்பிக்க ஜன.18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. புதிதாக பெயா்களைச் சோ்க்க படிவம் 6, இடமாற்றம் விரும்புவோர் படிவம் 8 ஆகியவற்றை பூா்த்தி செய்து சமர்ப்பித்தனா்.

இதற்காக, வார இறுதி நாட்களில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு முறை சிறப்பு முகாம்கள் நடத்தபட்டன. தொடா் விடுமுறை வந்ததால் பெயர் சோ்ப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஜன.18ம் தேதியுடன் முடிவடைந்த பெயா் சோ்ப்பு பணியை ஜன.30ம் தேதி வரை நீட்டித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக தொடர்ந்த வழக்கில் எஸ்ஐஆர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. விடுபட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பதிவேற்றிய பின்னர், வரும் பிப்.17ம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

ஈரான் தாக்குதலுக்கு முன் மோடி – நெதன்யாகு ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?

போர் பதற்றம் – இந்திய பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் வீழ்ச்சி

தொகுதி பங்கீட்டில் குழப்பம்: அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்

© NewsTimeTN. All Rights Reserved.