கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை

இந்தியாவுக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவுகள் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் பருவமழை பரவலாகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் ஜூலை முதல்வாரம் முழுமையாக பரவக்கூடும். வழக்கமாக ஜூன் 1ம் தேதி […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் […]