நாடு முழுவதும் இன்று ‘பந்த்’

மாநில அரசுகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றிய 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறுதல், வங்கி ஊழியர்களுக்கு வாரம் 5 நாட்கள் வேலை, அரசுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை தவிர்த்தல் ஆகியவற்றை கண்டித்து, நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தன. இந்த போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள், மாணவர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தமிழகத்தை பொருத்தவரை ஆளும் கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான […]
மகா சிவராத்திரிக்கு 1240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வரும் 15ம் தேதி (ஞாயிறு) மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதாலும், வார இறுதி என்பதாலும், ஏராளமான பொதுமக்கள் வழிபாட்டு தலங்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 125 சிறப்பு பேருந்துகளும் இதன் தொடர்ச்சியாக, நாளை 500, நாளை மறுதினம் 550 […]
தல’ தோனி ரூ.10 லட்சம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐபிஎல் சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விவாத நிகழ்ச்சியொன்றில் பேசியிருந்தார். இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு ‘தல’ தோனி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கிரிக்கெட் வீரர் தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. இந்த விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்தவும், இந்த கட்டணத்தை […]