சினிமாவிலிருந்து விலகலா? – இன்ஸ்டாவில் பதிலளித்த திரிஷா

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக ஏறக்குறைய 25 ஆண்டுகளாக வலம் வருபவர் திரிஷா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோருடன் நடித்தது மட்டுமின்றி, இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 பாகங்களிலும், தக் ஃலைப் படத்திலும் நடிப்பில் மிரட்டி இருந்தார். இப்படங்களில் இவரது கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது. இவர் நடிப்பில் கடந்தாண்டு, விடாமுயற்சி’,குட் பேட் அக்லி’, தக் லைஃப்’ […]
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 சரிவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நிலை கொண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து சவரன் ஒரு லட்சத்து […]
புதுச்சேரி, கேரளா, அசாமில் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (ஏப்.9) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 […]
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

சென்னை மற்றும் புறநகரில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்று நிலவுவதாகவும் இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு […]