உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 சரிவு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 சரிவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நிலை கொண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,810 க்கும் விற்பனையானது.

பின்னர், மாலையில் சவரனுக்கு ரூ.1,440ம், கிராமுக்கு ரூ.180ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,990க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 920க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் நேற்று காலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.255 ஆக இருந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாயாகவும் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,860க்கும் விற்பனையாகிறது.

அதே நேரம், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கும் கிலோ வெள்ளி ரூ.5,000 குறைந்து கட்டி வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.