புதிய கட்சி தொடங்கினார் தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா

தெலங்கானா முன்னாள் முதல்வரும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதா இன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயரில் தொடங்கப்பட்டு இயங்கி வந்த கட்சியை, தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என கேசிஆர் பெயர் மாற்றினார். இந்நிலையில், கவிதா இன்று ‘தெலங்கானா ராஷ்டிர சேனா’ (டிஆர்எஸ்) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். மேடையில் கட்சியின் பெயரை அறிவித்து, […]
விஜய் வாக்கு சதவீதத்தை பொறுத்து தமிழக அரசியல் சூழல் மாறும் – திருமாவளவன்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறுகிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 85% வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78% மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குப் பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட்கள் உள்ளிட்டவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக […]