உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பாஜகவில் இணைந்தனர் 7 ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள்

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டவர் ராகவ் சதா. இவர், கட்சி அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகிச் செல்வதாகவும், தனது 15 வருட உழைப்பு வீணானதாகவும், தனிப்பட்ட லாபத்திற்காக கட்சி செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி தலைமைக்கு எதிராக குற்றம்சாட்டி ராஜினாமா செய்தார். இதையடுத்து மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதை அடுத்து, கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்த ராகவ், […]

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்த மக்களுக்கு இபிஎஸ் நன்றி

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் 23ம் தேதி அன்று தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 7 மணி முதல் மாலை வரை வரிசையில் நின்று, மிக அதிகமான […]

பட்டாசு எடுத்து வைங்க… மே 14ல் பண்டிகை வருது… – ஆர்ஜே பாலாஜி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கருப்பு’. இத்திரைப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆல்பம் சாங்ஸ் மூலம் ஏற்கனவே பிரபலமாகியுள்ள சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி சூர்யா பிறந்த நாளான்று வெளியானது. இப்படத்தின் முதல் […]

மே.வங்க 2ம் கட்ட தேர்தல் – 142 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்வு

மே.வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த 23ம் தேதி, 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். […]

நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தோ்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஆண்டுதோறும் என்டிஏ நடத்தி வருகிறது. என்எம்சி.யின் https://www.nmc.org.in இணையதளத்தில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் […]

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி அசத்தல் வெற்றி

ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர் டிம் ஷெபர்ட் 2வது ஓவரில் டக் அவுட்டான நிலையில், கேப்டன் ரஹானே 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 155 […]

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். சாம்சன் 11 ரன்னில், ரபாடா பந்தில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஷிவம் தூபே 22, கார்த்திக் ஷர்மா 12, ஜேமி ஓவர்டன் 18 ரன்கள் எடுத்தனர். […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக […]

முற்றிலும் இந்தி மொழிக்கு மாறிய வானிலை ஆய்வு மைய இணையதளம்

அரசு துறை தொடர்பான அறிவிப்பு, இணையதளம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு அவ்வபோது இந்தியை திணிப்பது வழக்கமாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, மத்திய அரசு அவற்றை வாபஸ் பெறுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர்ப் பலகைகளின் மையத்தில் ஆங்கிலம் பிரதானப்படுத்தி இருந்த நிலையில், இடையில் இந்தி இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் […]

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்ப 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னை மற்றும் இதர ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக 14,508 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி, சென்னை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்ல சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் சேர்த்து 10,663 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் […]

© NewsTimeTN. All Rights Reserved.