உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

முற்றிலும் இந்தி மொழிக்கு மாறிய வானிலை ஆய்வு மைய இணையதளம்

முற்றிலும் இந்தி மொழிக்கு மாறிய வானிலை ஆய்வு மைய இணையதளம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அரசு துறை தொடர்பான அறிவிப்பு, இணையதளம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு அவ்வபோது இந்தியை திணிப்பது வழக்கமாகி உள்ளது.

இதற்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, மத்திய அரசு அவற்றை வாபஸ் பெறுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர்ப் பலகைகளின் மையத்தில் ஆங்கிலம் பிரதானப்படுத்தி இருந்த நிலையில், இடையில் இந்தி இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம் சிவகாசி ரயில் நிலையத்தின் புதிய பெயர்ப் பலகையின் மத்தியில் இந்தி பிரதானப்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழும்பியது.

மத்திய அரசின் இந்நடவடிக்கை தமிழை அவமதித்ததாக தெற்கு ரயில்வேக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதைத் தொடர்ந்து, ஏறக்குறைய ஒரு மாதம் கடந்த நிலையில், திருச்சி ரயில்வே நுழைவாயிலுக்கு கர்த்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருந்ததற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மத்திய அரசு முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றியுள்ளது. முதன்மை மொழியாக ஆங்கிலம் இருந்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இனி இணையதளத்திற்கு உள்ளே சென்ற பிறகே, ஆங்கில மொழியில் மாற்றிக் கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.