கோவை சிறுமிக்கு நடந்த கொடூரம் மனிதநேயமற்ற மன்னிக்க முடியாத குற்றம் – முதல்வர் விஜய்

கோவை சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் மன்னிக்க முடியாத குற்றச் செயல். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜயின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் […]
கோவை சிறுமி கொலை சம்பவம் – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது […]
என்னை துருப்பு சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க சதி – திருமா விளக்கம்

தவெக அமைச்சரவையில் விசிக இணைந்த முடிவிற்கு பதவி ஆசை காரணம் அல்ல என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிகவுக்கும் திமுகவுக்கும் இடையே கொள்கை புரிதல் உள்ளதாகவும் தமிழ்நாட்டின் நிலவிய அரசியல் நெருக்கடியால் தான் தவெக அரசுக்கு விசிக ஆதரவளித்தது என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவார் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை துருப்பு சீட்டாக பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திமுக கூட்டணியை உடைக்க சதி நடந்தது. ஆனால் நான் […]
கோவை சிறுமி கொடூர கொலைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

கோவையில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய […]
கேரள சபாநாயகராக காங். கட்சியின் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தேர்வு

கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தற்காலிக சபாநாயகர் ஜி. சுதாகரன் முன்னிலையில் 139 எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். இந்நிலையில், நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும், இடதுசாரி கூட்டணி சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.சி. மொய்தீனும், பாஜ சார்பில் கோபகுமாரும் போட்டியிட்டனர். கேரள சட்டப்பேரவை வரலாற்றில் சபாநாயகர் பதவிக்கு இம்முறை தான் பாஜக முதன்முதலாக போட்டியிட்டது. முதல்வர் வி.டி. சதீசன், முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், […]