மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் தலைமைச்செயலகத்தில் குதிரை பேரம்? – திமுக சரமாரி கேள்வி

இபிஎஸ், சிவிஎஸ்-எஸ்பிவி கூட்டணி என அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் இன்று சபநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து தங்களை தவெகவில் இணைத்து கொண்டுள்ளனர். முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் போது […]
வானிலை ஆய்வு மைய அறிக்கையை பொறுத்து பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு – அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜூன் 1ம் தேதி பள்ளி திறப்பு என அறிவித்திருந்தோம். ஆனால், பல்வேறு தரப்பில் இருந்து அதை மறுபரிசீலனை செய்யும்படி கோரிக்கை எழுந்தது. எனவே, இது தொடர்பாக அறிவியல் பூர்வமான சில தகவல்களை வானிலை ஆய்வு மையத்திடம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த ஒருவாரம் கோடை காலம் […]
விலைவாசி உயர்வால் மக்கள் பரிதவிப்பது ஆட்சியாளர்களுக்கு தெரியவில்லையா? – பெ.சண்முகம் கேள்வி

நாடு முழுவதும் கடந்த 12 நாட்களில், 4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.7 வரை உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்க பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 வரை உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பரிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா? என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி […]
அண்ணனாக பாதுகாப்பேன் என விஜய் பேசிய வீர வசனம் என்னாச்சு? – டிடிவி தினகரன் சாடல்

குழந்தைகள், பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜயின் வீர வசனம் என்னாச்சு? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை, விழுப்புரத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் சிறுவன் வெட்டி படுகொலை என தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் 4 இரட்டைக் கொலைகள் உட்பட 25 […]
12 தமிழர் உள்பட 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி முர்மு

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, வர்த்தகம், தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய 3 விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் விவரத்தை கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று மத்திய அரசு வெளியிட்டது. […]
மேகதாது வழக்கு – தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேகதாது அணை தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என 2025ம் ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்குப் போதுமான முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் […]
சிங்கப்பெண் படை எங்கே? இது தமிழ்நாடா, உ.பி.யா? இதுதான் மாற்றமா? – தவெக அரசுக்கு உதயநிதி சரமாரி கேள்வி

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டை கொலைகள் மற்றும் பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. சமீபத்தில் கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 17 வயது சிறுவன் வெட்டிக்கொலை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றன. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்று தவெக பேசிவந்த நிலையில், குற்றங்களைத் தடுக்கவும், […]
இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடு முழுவதும் இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. கோடை வெயில் காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் கடுமையாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை இல்லாத வகையில் வடமாநிலங்களில் வெப்ப அலை மிகவும் மோசமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் கூறுகின்றன. வெப்ப அலை காரணமாக தெலங்கானாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 16 […]
உயில் பதிவு செய்வது சட்டப்படி கட்டாயம் அல்ல – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சொத்துகளுக்கான உயிலை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியப் பதிவுச் சட்டம், 1908ன் படி, உயிலைப் பதிவு செய்வது கட்டாயமற்றது; விருப்பத்திற்குரியது. எனவே, பதிவு செய்யப்படாத உயிலும் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்படாத உயிலின் உண்மைத் தன்மையை நீதிமன்றத்தில் முறையாக நிரூபித்தால், அது முழுமையாகச் செல்லுபடியாகும் எனவும் உயில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக மட்டும் அந்த உயிலின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்க முடியாது என்றும் கூறியுள்ளது. […]
திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா விஜயின் மற்றொரு நண்பர்?

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தவெக சார்பில் முன்னாள் அமைச்சரான கு.ப. கிருஷ்ணன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு […]