பாஜக ஆட்சியில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கலைக்கப்பட்டு, முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. புதிய அரசு பதவியேற்ற மறுநாளே அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினரும், துணை ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு கடந்த 2023ம் ஆண்டு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி, […]
தேமுதிகவில் நாளை முதல் விருப்ப மனு வினியோகம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களின் அரசியல் களத்தில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழத்தை பொருத்தவரை நடிகர் விஜயின் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு பிப்.6ம் தேதி முதல் பிப்.14ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு நாளை (பிப்.6) முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. […]
ரயில் நிலைய பெயர் பலகை – மறைமுக இந்தி திணிப்பு?

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர் பலகைகளில் ஆங்கிலம் முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில், சிவகாசியில் புதிய பெயர் பலகையில் இந்தி பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து, தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்களின் மொழி உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு வேண்டுமென்றே இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொதித்தெழுந்துள்ளனர். […]
பறவை காய்ச்சல் – பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை அடையார், திருவான்மியூர், பள்ளிக்கரணை, இசிஆர் சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்தன. இறந்த காகங்களின் மாதிரிகளை காஞ்சிபுரத்தில் உள்ள கால்நடை நோய் தடுப்பு புலனாய்வுக் குழுவினர் சேகரித்து, போபாலில் உள்ள மத்திய தேசிய விலங்குகள் நோய் கட்டுபாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொண்ட சோதனைகளின் […]