தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க ஏப்.20 முதல் விண்ணப்பம்

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை சேர்க்க வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையற்ற பள்ளிகளில், சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலையான எல்கேஜி மற்றும் முதல் வகுப்புகளில் குறைந்த பட்சம் 25% […]
ஏப்ரலில் வெப்ப அலை வீசும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளி மண்டலத்தில், கிழக்கு உ.பி. முதல் தென் தமிழகம் வரையில் விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வுப்பாதை ஒன்று நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
அஇபுதமமுக.வின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியையும், திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் கட்சியையும் தொடங்கினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்ற சசிகலா வெளியே வந்த பின்பு, அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே நேரம், கடந்த […]
மதிமுக 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் – வைகோ

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, ஒப்பந்தம், வேட்பாளர் பட்டியல், […]