உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நிலவரம் சூடுபிடித்து, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தானது. திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ மதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேல்முருகனின் தவாக கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இதையடுத்து, திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து, கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இதனையொட்டி […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு

ஆபரணத் தங்கம் விலையில் தொடர்ந்து நிலையற்றத்தன்மை காணப்பட்டு வருகிறது. ஈரான்-அமெரிக்கா போரினால் தங்கம் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்து சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 400 ரூபாயாகவும் கிராமுக்கு ரூ.380 அதிகரித்து கிராம் ரூ.14,050 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து சவரன் ஒரு லட்சத்து […]

எழும்பூரில் வரும் 5ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை சீராகும் – அதிகாரிகள் தகவல்

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முக்கிய முனையமாக எழும்பூர் ரயில் நிலையம் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், எழும்பூர் நிலையத்தின் மறுபுறத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில் சேவையும் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு ரூ.820 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 2025ம் ஆண்டு முதல் எழும்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. […]

தவெகவுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைவதால், இம்மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதியும், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 9ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. […]

தேர்தல் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகல்

தமிழ்நாட்டில் திமுகவுடன் தொடர்ந்து பயணித்து சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டு வரும் காங்கிரஸ் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்கிறது. இருப்பினும், இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி, உள்ளாட்சி பதவிகளில் 20% என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முன்னெடுத்து வந்தனர். இதனால், […]

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கட்சியை அடகு வைக்கவில்லை – மு.க.ஸ்டாலின் பதிலடி

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கட்சிகள் அவற்றின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட கூட்டணி பேரத்தை முடித்து விட்டு, வேட்பாளர் அறிவிப்பும் முடிந்து தற்போது தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு […]

லக்னோவை அதிரடியாக வென்று டெல்லி அணி அசத்தல்

ஐபிஎல் 19வது டி20 கிரிக்கெட் தொடரின் 5வது போட்டி லக்னோவின் ஏகானா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினர். தொடக்கம் முதல் சொதப்பிய ரிஷப் 7 ரன்களில் ரன்அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அதிரடி […]

இன்று முதல் உள்ளூர் விமான கட்டணங்கள் அதிரடி உயர்வு

மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் வினியோகம் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், எரிவாயு விலை உலகளவில் அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, விமான எரிபொருள் கட்டணங்களும் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், பயணிகளின் விமான டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு […]

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை – வானிலை மையம் தகவல்

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், தமிழக உள் மாவட்டங்களிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்று நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான […]

குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் 19வது டி20 தொடரின் போட்டிகள் கடந்த 28ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த போட்டிகள் இரண்டு கட்டமாக நடக்கும் நிலையில், முதல் போட்டியில் ஐதராபாத்தை நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வாகை சூடியது. அதைத் தொடர்ந்து, நடந்த 2வது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ் செய்து மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து, கவுகாத்தியில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் […]

© NewsTimeTN. All Rights Reserved.