உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு

ஏப்.24ல் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு?

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி – சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நிலவரம் சூடுபிடித்து, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தானது.

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ மதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேல்முருகனின் தவாக கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.

இதையடுத்து, திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து, கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் தங்களது பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 2ம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதனிடையே, ஏப்.6ம் தேதி காலை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், கடந்த 30ம் தேதி சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, அவர் திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் உடன் இருந்தார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் உதயநிதி அத்தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர். சுகந்தியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு

ஏப்.24ல் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு?

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி – சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு

பகிர்:

சமீபத்திய இடுகைகள்

Send Us A Message

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© NewsTimeTN. All Rights Reserved.