அதிமுக வென்றாலும் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் – ராம்தாஸ் அத்வாலே

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ளதால், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறுவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. அதே நேரம், அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட […]
மீண்டும் இணைகிறது ‘பிரேமம்’ திரைப்பட கூட்டணி?

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மீண்டும் ‘பிரேமம்’ படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதைத் தொடர்ந்து அல்போன்ஸ் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த […]
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1000 உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நிலை கொண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான திங்களன்று காலையில் சவரனுக்கு ரூ.1,120 குறைந்தும், மாலையில் சவரனுக்கு ரூ.1,440 […]
விஜய் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார் – பியூஷ் கோயல்

கோவையில் நடந்த தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்கா 50% வரி விதித்த போது நாட்டில் உள்ள மீனவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி நன்மை பெறச் செய்தார் பிரதமர் மோடி என்றார். அதே போல் வளைகுடா போர் பதற்றத்தால் உலகம் முழுவதும் பெட்ரோலுக்கு பல பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் இந்தியாவில் அது போன்று […]
இன்று முதல் 14 வரை வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை உயரும் – வானிலை மையம் அலர்ட்

தமிழகத்தில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்று நிலவுகிறது. வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல […]
3 மாநிலத் தேர்தல்: புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் 89.2% வாக்குப்பதிவு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் இம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான தேதியை கடந்த 15ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட்டு […]