தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒரு நாள் விலை குறைவதும் மறுநாள் முந்தைய நாளின் விலையை விட […]
ஏப்.24ல் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு?

நடிகர் அஜித் கடந்த 1993ம் ஆண்டில் இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர், வசந்த் இயக்கத்தில் நடித்த ஆசை, இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை, எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் உருவான வாலி, சரண் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், ராஜிவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்கள் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுத்தந்தது. அந்த வகையில், அஜித்தின் 25வது திரைப்படமாக இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 1999ம் […]
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி – சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நேரடியாக பணவீக்கத்தை ஏற்படுத்துவதால், பங்குகளின் மதிப்பு குறைய தொடங்குகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை இந்திய பங்குச்சந்தைகளிலிருந்து வெளியே எடுத்து செல்வதும் இந்த வீழ்ச்சிக்கு மற்றொரு முக்கிய காரணமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளுக்காக அமெரிக்க சந்தைகளுக்கு திரும்புவதால், இந்திய […]
தமிழகத்தில் வெப்பநிலை 2-3° செல்சியஸ் அதிகமாகும் – வானிலை மையம்

தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில பகுதிகளில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பீகார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்று நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் […]
அண்ணாமலை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை – செந்தில் பாலாஜி அதிரடி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி, தவெக மற்றும் நாதக இடையே 4 முனைப்போட்டி […]