உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஏப்.24ல் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு?

ஏப்.24ல் அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடிகர் அஜித் கடந்த 1993ம் ஆண்டில் இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்னர், வசந்த் இயக்கத்தில் நடித்த ஆசை, இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை, எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் உருவான வாலி, சரண் இயக்கத்தில் நடித்த அமர்க்களம், ராஜிவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்கள் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுத்தந்தது.

அந்த வகையில், அஜித்தின் 25வது திரைப்படமாக இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டு திரைக்கு வந்த அமர்க்களம், அஜித்தின் சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

சண்டை, காதல் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு, பரத்வாஜ் இசையமைத்த பாடல்கள் பக்கபலமாக அமைந்தன.

இப்படம் வெளியாகி 26 ஆண்டுகளான நிலையில், அஜித் – ஷாலினி திருமண நாளை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே தினத்தில், விஜயின் ’சிவகாசி’, மாதவனின் ’ரன்’ ஆகிய படங்களும் ரீ ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை பொறுத்தவரை அவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அஜித் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரும் 24ம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.