மருத்துவமனையில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணி, தவெக, நாதக இடையே 4 முனைப்போட்டி நிலவி வந்த நிலையில், ராமதாஸ்-சசிகலா கூட்டணியால் தற்போது 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி, அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், […]
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரிப்பு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அண்மைக் காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் விலை குறைவதும் மாலையில் விலை அதிகரிப்பதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக […]
லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அபார வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 23வது லீக் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்ந்தது. இதையடுத்து லக்னோவின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், அய்டன் மார்க்ரம் களமிறங்கினர். ரசிக் சலாம் வீசிய 4வது ஓவரில் அய்டன் மார்க்ரம் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன் எடுத்த நிலையில் காயத்துடன் […]