தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் கடந்த 30ம் தேதி தொடங்கிய முதல் வேட்புமனு தாக்கல் ஏப்.6ம் தேதியுடன் முடிவடைந்தது. தவெக தலைவர் விஜய் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாகசென்று கொடுங்கையூரில் பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்துக்கு முன்கூட்டியே பிரசாரத்தை தொடங்கி, பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கொளத்தூருக்கு புறப்பட்டார். விஜய் புறப்பட்ட செய்தி அறிந்து […]
ஏப்.18 தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. […]
ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி இல்லை; இனிமேல் கலீல் அகமதுவும் இல்லையா?

ஐபிஎல் 2026 தொடர் கடந்த மாதம் 28ம் தொடங்கி நடந்து வருகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்களான ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதின. இதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 மேட்ச்களில் 2ல் மட்டும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் […]
தொகுதி மறுசீரமைப்பினால் தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் – திமுக எம்.பி. திருச்சி சிவா

இன்று கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவை சென்ற திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். அதே போல், சென்னையில் திமுக […]
தொகுதி மறுவரையறை மசோதா எதிர்ப்பு போராட்டத்தை ராகுல் வழிநடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இன்று கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று மக்களவைக்கு சென்ற திமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து சென்றிருந்தனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர். அதே போல், சென்னையில் […]
இணைந்து பணியாற்றலாமா ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டார் – ஆர்ஜே பாலாஜி உருக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கருப்பு’. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இத்திரைப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆல்பம் சாங்ஸ் மூலம் ஏற்கனவே பிரபலமாகியுள்ள சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பிலிருக்கும் இந்த படம், கடந்தாண்டு தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது. இதனிடையே, […]
வார இறுதி, கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்கள், கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. வார இறுதி நாட்களான நாளை மற்றும் ஏப். 18, 19 தேதிகளில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மற்றும் 18ம் தேதி (சனிக்கிழமை), 19ம் தேதி (ஞாயிறுக்கிழமை), […]
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடெங்கும் எதிர்ப்பு தீ பரவட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழரை சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இன்று முதல் 3 நாள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கல் தாக்கலாகின்றன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. முதல்வர் இல்லம், […]
ஏப்.21 முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் ஒரே மேடையில் பிரசாரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, ஆளும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. […]
தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை – தவெக தலைவர் விஜய் கண்டனம்

தொகுதி மறுசீரமைப்பு மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், மத்திய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543லிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026 மூலம், மக்களவையின் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா இன்று தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருப்பதாகப் பதிவிட்டுள்ளார். மேலும், […]