சென்ட்ரல் – அரக்கோணம் பராமரிப்புப் பணி – நாளை முதல் 5 மின்சார ரயில்கள் ரத்து

சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் அரக்கோணம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை முதல் மே 31 வரை, சில மின்சார (இஎம்யூ/எம்இஎம்யூ) ரயில்கள் முழுமையாகவும், பல ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த மாற்றங்களை முன்கூட்டியே கவனத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அரக்கோணம் பணிமனையில் மே 17, 18ம் தேதிகளில் தண்டவாள தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனையொட்டி, அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி, 5 மணி மற்றும் […]
தமிழகத்தில் மே 26 தென்மேற்கு பருவமழை தொடங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில், இந்தாண்டு மே 26ம் தேதிக்குள் கேரளாவை அடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டும் தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி தொடங்கிய நிலையில், இந்தாண்டும் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளதாகவும் இந்த கணிப்பில் 4 நாட்கள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ மாறுபடலாம் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்த பருவமழை முன்னேற்றத்தின் காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. தென்மேற்கு […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]
தொடங்கியது 2026-27 நிதியாண்டுக்கான ஆன்லைன் வருமான வரி தாக்கல் செயல்முறை

சிறு மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு ஏற்ற எளிமையான வருமான வரி படிவம் (ஐடிஆர்)-1 மற்றும் வருமான வரி படிவம்-4 ஆகியவற்றை, 2025-26 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான (2026-27 மதிப்பீட்டு ஆண்டு) இணையவழி தாக்கல் செயல்முறையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதற்கான இந்த படிவங்கள் மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டன. வருமான வரித்துறை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-4 படிவங்களுக்கான எக்ஸல் மற்றும் ஆன்லைன் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதால், வரி செலுத்துவோர் இனி எளிதில் வரி […]
ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை துவக்கம் முதல் தடுமாற்றத்துடன் ஆடினர். ஆகாஷ் சிங் வீசிய 4வது ஓவரில் கேப்டன் ருதுராஜ், 13 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து […]