உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் – லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். இந்த இணை துவக்கம் முதல் தடுமாற்றத்துடன் ஆடினர்.

ஆகாஷ் சிங் வீசிய 4வது ஓவரில் கேப்டன் ருதுராஜ், 13 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி அசத்திய ஆகாஷ் சிங், 6வது ஓவரில் சஞ்சு சாம்சனை (20 ரன்) வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய உர்வில் படேல் 6 ரன்கள் எடுத்த நிலையில், ஆகாஷ் சிங் வீசிய 8வது ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பின், கார்த்திக் சர்மா, டெவால்ட் புரூவிஸ் இணை சேர்ந்து சிறப்பாக ஆடினர். புரூவிஸ் 25 ரன்கள் எடுத்த நிலையில், முகம்மது ஷமியிடம் வீழ்ந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்ட கார்த்திக் சர்மா 42 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில், ஷாபாஸ் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின், சிவம் தூபே, பிரசாந்த் வீர் இணை சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்களை விளாசினர். 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் எடுத்தது.

சென்னை அணியின் சிவம் தூபே 18 பந்துகளில் 32 ரன், பிரசாந்த் வீர் 10 பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். லக்னோ தரப்பில் ஆகாஷ் சிங் 3, முகம்மது ஷமி, ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, களம் இறங்கிய லக்னோ அணி 16.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனால், 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் மிஷெல் மார்ஷ் 90 (38 பந்துகள் 9 பவுண்டரி 7 சிக்சர்), ஜோஷ் இங்லிஸ் 36 ரன்கள் எடுத்தனர். நிகோலஸ் பூரன் 32 (17 பந்துகள் 1 பவுண்டரி, 4 சிக்சர்), முகேஷ் சவுத்ரி 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணியின் சவுத்ரி, ஜான்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மார்ஷ் சவுத்ரி பந்துவீச்சில் ரன் அவுட்டானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.