உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக 4 பிரம்மாண்ட சாதனை படைத்த சூர்யவன்ஷி

தனது 12 வயதில் ரஞ்சி, 13 வயதில் ஐபிஎல் ஏலம் என சாதனைப் பாதை தொடங்கிய வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடி ஆட்டம் காட்டி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். முதல் பந்திலேயே சிக்ஸர், சன்ரைசர்ஸ் மீது 37 பந்தில் சதம், இப்போது 16 ஆட்டங்களில் 776 ரன்கள், 73 சிக்ஸர்கள் என 15 வயதிலேயே ஐபிஎல் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளார். தனது 12 வயதில் பீகார் மாநில அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி […]

ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி

ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி, 14 போட்டிகளில் 9 ஆட்டங்களில் வெற்றிபெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதைத் தொடர்ந்து, எலிமினேட்டர் போட்டியில் பலம்வாய்ந்த ஐதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, நேற்று நியூசண்டிகரில் நடைபெற்ற குவாலிஃபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, அந்த அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி தொடக்க […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், […]

டைம் எடுத்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் – உதயநிதி சாடல்

கடலூரில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது. இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது. இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை – கொள்ளை – பாலியல் […]

ஊசலாட்டமின்றி மாநில உரிமைகளை நிலைநாட்டுக – தவெக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

கடந்த திமுக ஆட்சியின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களின் மீது அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி எந்தவிதமான முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அத்துடன், ஆளுநர் கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களில் தமிழ்நாட்டில் இயங்கும் மாநில அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநருக்கு பதிலாக மாநிலத்தின் முதலமைச்சரே வேந்தராக இருப்பார் என்ற மசோதாவும் ஒன்றாகும். இந்த சூழலில், முதலமைச்சரே பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்பதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை […]

மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்க கூடாது: பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு முறையீடு

மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்க்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது பகுதியில் சுமார் ரூ.9,000 கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு […]

திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர் சஸ்பெண்ட்

அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆய்வு செய்ய சென்ற போது அவரிடம் விரைவு தரிசனத்துக்காக ரூ.4,000 பணம் பெற்ற அர்ச்சகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாதாரண உடையில் முக கவசம் அணிந்து திடீரென ரகசிய ஆய்வு மேற்கொண்டார். அவர் கோயில் வளாகம், அன்னதானம் வழங்கும் இடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தரிசன வரிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். அதன் […]

© NewsTimeTN. All Rights Reserved.