உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.3,680 வெள்ளி கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் சரிவு

கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,680 மற்றும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் சரிவடைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் […]

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கி.மீ உயரத்தில் தமிழக கடலோர பகுதிகளின் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று இடி […]

சூர்யவன்ஷிக்கு தனியறை, கூடுதல் பாதுகாப்பு – இங்கி. கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய (இசிபி) பாதுகாப்பு விதிமுறைகளின்படி, கூடுதல் பாதுகாப்பு மற்றும் தனியறை ஒதுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார். அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் பெல்பாஸ்ட் நகரில் ஜூன் 26 மற்றும் ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு […]

300 புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர் விஜய் – பெரம்பூர் செல்லும் பேருந்தில் பயணம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தலைமைச்செயலக வளாகத்தில் முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை ஆய்வு செய்த அவர் தனது தொகுதியான பெரம்பூர் செல்லும் பேருந்தில் பயணித்தார். முந்தைய ஆட்சியில் அரசுப் போக்குவரத்து கழகம் என்று மட்டும் இருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், விழுப்புரம் மற்றும் […]

திமுக மாஜி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற கொறடாவுமான எ.வ.வேலு, கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது அவர், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன. இதனிடையே, தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் பெற லஞ்சம் பெறப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் […]

© NewsTimeTN. All Rights Reserved.