உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திமுக மாஜி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திமுக மாஜி அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.

திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திமுக சட்டமன்ற கொறடாவுமான எ.வ.வேலு, கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது அவர், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்களுக்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.

இதனிடையே, தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஒப்பந்தம் பெற லஞ்சம் பெறப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் அண்மையில் பேட்டியளித்திருந்தனர்.

இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின் பேரில் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு, திருவண்ணாமலையில் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது அலுவலகம், உறவினர்களின் இல்லம் உள்பட 13 இடங்களில் சோதனை நடத்தினர்.

அண்மையில் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், லஞ்சம் ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், இந்த வழக்கை எ.வ.வேலு சட்ட ரீதியாக எதிர்கொண்டு நீதிமன்றத்தில் தனது தரப்பு நியாயத்தை நிரூபிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.