தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் தங்களுடைய தொகுதியில் வாக்களித்து வருகின்றனர்.
காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69% வாக்குகள் சராசரியாக பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரிக்கு குடும்பத்துடன் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாக்களித்தார்.
பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘அனைரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்’ எனத் தெரிவித்தார்.


