உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மே.வங்க முதல்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவு

மே.வங்க முதல்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மேற்கு வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார்.

இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரம், பாஜகவும் கடுமையான பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முதல்கட்டமாக 152 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. 2ம் கட்டமாகத் 142 தொகுதிகளுக்கு வரும் 29ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் முதல்கட்ட 152 தொகுதிகளில் 1,478 வேட்பாளர்கள், 2ம் கட்டமாகத் தேர்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.

இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்.9 கடைசி நாளாக இருந்தது. வேட்புமனுக்கள் ஏப்.10 அன்று பரிசீலனை செய்யப்பட்டன. மேலும் ஏப்.13 வரை வேட்புமனுக்களைத் திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டது. இறுதியில் இரண்டு கட்ட தேர்தலிலும் சேர்த்து மொத்தம் 2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதற்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பஸ்சிம் மதினிப்பூரில் 44.69% வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.