உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

என்டிஏ கூட்டணியில் எந்த கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை – தவெக

என்டிஏ கூட்டணியில் எந்த கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை – தவெக

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழக அரசியல் வரலாறில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய திராவிட கட்சிகளை தனது 2 வருட அரசியல் வருகையால் திணறடித்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சாதனை படைத்து வாகை சூடியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்ட நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலில் இரு திராவிட கட்சிகளுக்கும் கடும் போட்டியாக அமைந்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் 59 தொகுதிகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர முடியாதபடி அதிமுக 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, தவெகவினருடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க அதிமுகவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய தவெக நிர்வாகி நிர்மல் குமார், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்தித்ததாக வெளியான தகவல் தவறு. என்டிஏ கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.