உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நாளை முடிவு: திருமாவளவன்

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று ஆலோசனை நாளை முடிவு: திருமாவளவன்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சி அமைக்க போதுமான அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 2, தேமுதிக 1 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூ. கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது. இதில் கூட்டணி தர்மத்தை மீறி, பதவி சுகத்துக்காக காங்கிரஸ் மட்டும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.

மேலும், தவெக தலைவர் விஜய் விசிக தலைவர் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மேலும் தவெகவின் 2ம் கட்ட தலைவர்கள் கம்யூ. கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தவெகவுக்கு ஆதரவா என்பது குறித்து இன்று மாலை 5 மணிக்கு விசிக ஆலோசனை நடத்தவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் தலைவர் என்ற முறையில் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்க தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிர்வாகிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியாமல் தானே முடிவெடுக்க முடியும் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சியமைக்க எந்த விதத்திலும் இடையூறாக இருக்க மாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசிகவிடம் கூறியதாகவும் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக மு.க.ஸ்டாலின் கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.