உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

12ம் வகுப்பு துணை தேர்வு, மறுமதிப்பீடு எப்போது?

12ம் வகுப்பு துணை தேர்வு, மறுமதிப்பீடு எப்போது?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

தமிழகத்தில் கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 6ம் தேதி முதல் ஏப்.20ம் தேதி வரை நடந்து முடிந்தன. விடைத்தாள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதையடுத்து, தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் நிலையில், புதிய அரசு ஆட்சி மாற்றத்தின் காரணமாக, தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், திட்டமிட்டபடி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும் என அரசு தேர்வுத்துறை இயக்ககம் நேற்று அறிவித்தது.

அதன்படி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 95.20% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.19%, மாணவிகள் 97% தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 3,47,527 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.81% தேர்ச்சி அதிகம்.

மாவட்டத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சியும், சிவகங்கை மாவட்டம் 2வது இடம் பிடித்து 98.05% தேர்ச்சியும், கன்னியாகுமரி மாவட்டம் 3வது இடம் பிடித்து 97.63% தேர்ச்சியும் பெற்றுள்ளன.

அரசு பள்ளிகளை பொறுத்தவரை, ஈரோடு மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை, திருச்சி மாவட்டங்கள் 2வது மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.17% தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. சிறைவாசிகள் 250 பேர் தேர்வு எழுதியிருந்த நிலையில், 238 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும் 13ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் தமிழில் 83, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 732, இயற்பியலில் 105, வேதியியலில் 632, உயிரியலில் 784 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.

மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, TNRESULTS.NIC.IN, DGE.TN.GO.IN, RESULTS.DIGILOCKER.GOV.IN இணையதளங்களிலும், பயின்ற பள்ளிகளிலும், 78452 52525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மே 18ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஜூன் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

சுங்கச்சாவடிகளில் ஜூன் 1 முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

2வது குவாலிஃபயர் போட்டி – இன்று குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை

© NewsTimeTN. All Rights Reserved.