உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டி கொல்கத்தாவில் நேற்று, மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடையே நடந்தது.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீசியது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா களமிறங்கினர். கொல்கத்தா வீரர்கள் துல்லியமாக பந்து வீசியதால் மும்பை அணியினர் திணறலுடன் ஆடினர். கேமரூன் கிரீன் வீசிய 3வது ஓவரில் ரையான் ரிக்கல்டன் (6 ரன்) ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து நமன் திர், கிரீன் வீசிய பந்தில் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா (15 ரன்) சவுரவ் தூபே பந்து வீச்சில் அவுட்டாக்கினார்.

பின், சவுரவ் தூபே வீசிய 6வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் (15 ரன்) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். 8 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழந்து 57 ரன் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர், ஓவர் குறைப்பின்றி ஆட்டம் மீண்டும் துவங்கியது. களத்தில் இருந்த திலக் வர்மா – பாண்ட்யா ஜோடி நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சவுரப் தூபே, கேமரூன் கிரீன் மற்றும் கார்த்திக் தியாகி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா விளையாடியது. இதில், கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 47 (33 பந்து, 6 பவுண்டரி) பவெல் 40 (30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்கள் எடுத்திருந்தனர்.

மும்பை அணி தரப்பில் கோர்பின் போஷ் 3, சஹர், பும்ரா, கஸன்ஃபர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.