உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஆர்சிபி-க்கு எதிரான போட்டி: சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

ஆர்சிபி-க்கு எதிரான போட்டி: சன்ரைசர்ஸ் அசத்தல் வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இந்த இணை துவக்கம் முதல் அடித்து ஆடத் துவங்கினர். ரசிக் சலாம் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில் அணியின் ஸ்கோர் 45 ஆக இருந்தபோது, ஹெட் 16 பந்துகளில், 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இஷான் கிஷன் களமிறங்கினார்.

இந்த இணையும் ஆர்சிபி அணியின் பந்துகளை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. சுயாஷ் சர்மா வீசிய 9வது ஓவரில் அபிஷேக் ஷர்மா (22 பந்து, 5 சிக்சர், 4 பவுண்டரி, 56 ரன்) அவுட்டானார்.

அதன் பின், இஷான் கிஷனுடன், ஹென்றிச் கிளாசன் இணை சேர்ந்து, ஆர்சிபி பந்து வீச்சை வெளுத்து வாங்கி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

இதனால், 12.5 ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 150ஐ எட்டியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 31 பந்துகளில், 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் அரை சதம் தொட்டார்.

இறுதியில் 15.2 ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 200ஐ எட்டியது. சிறிது நேரத்தில் கிளாசன் 24 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்த நிலையில் க்ருணால் பாண்ட்யா பந்தில் அவுட்டானார்.

பின்னர், நிதிஷ் குமார் ரெட்டி களமிறங்கினார். ரசிக் சலாம் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷன் (46 பந்து, 3 சிக்சர், 8 பவுண்டரி, 79 ரன்) ஆட்டமிழந்தார்.

கடைசியில் 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் விளாசியிருந்தது.

அந்த அணியின் நிதிஷ் குமார் ரெட்டி 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்சிபி தரப்பில் ரசிக் சலாம் 2, சுயாஷ் ஷர்மா, க்ருணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2வது இன்னிங்சை தொடங்கிய ஆர்சிபி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 55 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று விளையாடிய போட்டியுடன் சேர்த்து அவர் ஆடிய ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்தது. இதன் மூலம், ஐபிஎல்லில் அதிக போட்டிகள் ஆடிய வீரர் என்ற மெகா சாதனையை அவர் படைத்தார். மும்பை அணி வீரர் ரோகித் சர்மா 280 போட்டிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். கோலி, 281 போட்டிகளில் ஆடி 9,203 ரன்கள் குவித்துள்ளார். இதில் 9 சதங்கள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.