உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு – முதல்வர் சிறப்புரை

திமுக இளைஞரணி தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, திமுக -அதிமுக தலைமையிலான கூட்டணிகள் மற்றும் நடிகர் விஜயின் தவெக இடையே மும்முனை போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் அதன் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. மதுரை […]

டிஜிட்டல் மோசடி பணம் இழப்போருக்கு ரூ.25,000 இழப்பீடு: ஆர்பிஐ அறிவிப்பு

ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் நடத்துகிறது. இதில் வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறிய போது, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.25 சதவீதமாகவே நீடிக்கும். இந்த விகிதம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். தேவைப்பட்டால் பின்னர் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. […]

யு19 உலகக் கோப்பை – 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 16ஆவது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்தின் பந்து […]

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம்: அல்காரஸ் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் கடும் போராட்டத்திற்கு பின் செர்பியாவின் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் ஆனார். ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அந்நாட்டின் மெல்போர்ன் நகரில் நடந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22) செர்பிய வீரர் ஜோகோவிச் (38) பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டில் 2-6 என ஜோகோவிச் ஆதிக்கம் […]

விஜய் வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் உத்தரவு

வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-16ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான அவரது வருமானம் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கைப்பற்றிய ஆவணங்களுடன் ஒப்பிடும் போது, ’புலி’ படத்தின் சம்பளமாக வாங்கிய […]

© NewsTimeTN. All Rights Reserved.