உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம்: அல்காரஸ் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம்: அல்காரஸ் அசத்தல் வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

ஈரான் தாக்குதலுக்கு முன் மோடி – நெதன்யாகு ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?

போர் பதற்றம் – இந்திய பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் வீழ்ச்சி

தொகுதி பங்கீட்டில் குழப்பம்: அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் கடும் போராட்டத்திற்கு பின் செர்பியாவின் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் ஆனார்.

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் அந்நாட்டின் மெல்போர்ன் நகரில் நடந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் (22) செர்பிய வீரர் ஜோகோவிச் (38) பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டில் 2-6 என ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தினார். அதன் பிறகு, அல்காரஸ் கை ஓங்கியது. அடுத்தடுத்த செட்களில் அவர் ஜோகோவிச்சுடன் அதிரடியாக விளையாடி அசத்தினார்.

அடுத்த 3 செட்களையும் 6-2, 6-3 மற்றும் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றினார். இது அவரது 7வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இது மட்டுமின்றி அவர் ஆஸ்திரேலியா ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் ஆகிய 4 தொடரிலும் சாம்பியம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமைக்குரியராகி உள்ளார்.

இந்த போட்டியில், 10 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் பெற்ற ஜோகோவிச் வெற்றி பெற்றிருந்தால், ஒட்டுமொத்த 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

ஈரான் தாக்குதலுக்கு முன் மோடி – நெதன்யாகு ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?

போர் பதற்றம் – இந்திய பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் வீழ்ச்சி

தொகுதி பங்கீட்டில் குழப்பம்: அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்

© NewsTimeTN. All Rights Reserved.