உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மகளிர் பிரிமியர் லீக் – ஆர்சிபி அணி மீண்டும் சாம்பியன்

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 4வது சீசனின் இறுதிப் போட்டிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் ஜெமிமா ரொட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணிகள் தகுதிபெற்றன. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 3 முறை பைனல் வரை முன்னேறி கோப்பையை இழந்ததால், இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் அபாரமாக ஆடியது. இருப்பினும், ஆர்சிபி வீராங்கனைகளின் […]

பிப்.17 இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகின. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பிப்.17ம் தேதி காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று […]

யுஜி நீட் நுழைவுத் தேர்வு: மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இத்தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், வரும் மே 3ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை நீட் தேர்விற்கு மார்ச் 8ம் தேதிக்குள் […]

ஜன நாயகன் ரிலீஸ் – தயாரிப்பு நிறுவனம் முக்கிய முடிவு

பொங்கல் வெளியீடாக கடந்த மாதம் 9ம் தேதி திரைக்கு வரவிருந்த ஜன நாயகன் படத்திற்கு சென்சார் போர்டு, சான்றிதழ் வழங்க மறுத்து மறு ஆய்வுக்கு பரிந்துரைத்தது. இதை எதிர்த்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த தனிநீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிட்டு, மறுஆய்வு பரிந்துரையை ரத்து செய்தார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த சென்சார் போர்டு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றது. […]

தூய்மைப் பணியாளர் உணவுத் திட்ட விரிவாக்கம் – தொடங்கி வைத்தார் முதல்வர்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி தொடங்கி வைத்து, வெப்பக் காப்புப் பையில் வைக்கப்பட்ட உணவுக் கலன்களை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதற்கிடையே, நகரங்களையும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் […]

© NewsTimeTN. All Rights Reserved.