உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

யுஜி நீட் நுழைவுத் தேர்வு: மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்

யுஜி நீட் நுழைவுத் தேர்வு: மார்ச் 8 வரை விண்ணப்பிக்கலாம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது.

இத்தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், வரும் மே 3ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை நீட் தேர்விற்கு மார்ச் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என என்டிஏ அறிவித்துள்ளது. இதன்படி, வரும் மே 3ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட தகவல்களை மின்னஞ்சல் வாயிலாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1700, பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1600, எஸ்சி – எஸ்டி பிரிவுக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

தேர்வுக்கான கட்டணத்தை மார்ச் 8ஆம் தேதி இரவு 11.50 மணி வரை நெப்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட வழிமுறைகளில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விவரங்களை https://nta.ac.in/ மற்றும் https://neet.nta.nic.in/ வலைதளங்களில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.