உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மகளிர் பிரிமியர் லீக் – ஆர்சிபி அணி மீண்டும் சாம்பியன்

மகளிர் பிரிமியர் லீக் – ஆர்சிபி அணி மீண்டும் சாம்பியன்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மகளிர் பிரிமியர் லீக் தொடரின் 4வது சீசனின் இறுதிப் போட்டிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் ஜெமிமா ரொட்ரிக்ஸ் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணிகள் தகுதிபெற்றன.

இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி மகளிர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 3 முறை பைனல் வரை முன்னேறி கோப்பையை இழந்ததால், இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் அபாரமாக ஆடியது.

இருப்பினும், ஆர்சிபி வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஆர்சிபியின் சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் ரன்களைக் கட்டுப்படுத்தினர்.

டெல்லி கேபிடல்ஸ் அணியில், முதலில் களமிறங்கிய லிஷில் லீ 37 (30) ரன்களும், ஷபாலி வர்மா 20 (13) ரன்களும் எடுத்தனர். பின்னர், லூரா வெல்வர்ட் 44 ரன்கள் எடுத்த நிலையில், நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரொட்ரிக்ஸ் 57 (37) எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் பின்னர், 204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தொடக்கத்திலேயே அதிரடி காட்டினார். 41 பந்துகளில் 87 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி படுத்தினார். அடுத்து விளையாடிய ஜார்ஜியா வால் 79 ரன்கள் குவித்தார். இறுதியில் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், ஆர்சிபி மகளிர் அணி 2வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.