சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ ரயிலை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தின் கீழ் பூவிருந்தவல்லி – வடபழனி இடையிலான 15.8 கி.மீ தூர உயர்மட்டப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. இந்த வழித்தடத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த பணிகளின் இறுதிக்கட்ட பாதுகாப்பு ஆய்வுகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (சிஎம்ஆர்எஸ்) அனுமதி அளித்துள்ளார். இதனால், மார்ச் 2026க்குள் […]
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலிஜியம் குழு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூடிய போது, பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, கொலிஜியத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய சட்டத்துறை மற்றும் குடியசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது […]
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்… ஏப்.1 முதல் பெட்ரோல் விலையில் மாற்றம்?

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலை, சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி, ஏப்.1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகம் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகளின் எரிபொருள் செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஏப். 1 முதல் அனைத்து எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களும் (ஓஎம்சிக்கள்) ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் […]
நடிகையுடன் உறவு – விவாகரத்து கோரி தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா மனு

நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட லண்டன் வாழ் தமிழ் பெண்மணியான அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சினை ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வசிப்பதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய், திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு அவரது கட்சியிலும், பொதுவெளியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, நயினாரும் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் […]
அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் சர்வாதிகாரி இபிஎஸ் – ஓபிஎஸ் கடும் தாக்கு

அதிமுகவில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த மூத்த தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் உடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதன் போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு உடனிருந்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அதன் பின்பு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அண்ணா […]