உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மோகன்லால் பிறந்தநாளன்று த்ரிஷ்யம் 3 ரிலீஸ்

மோலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் `த்ரிஷ்யம்’. இந்த வெற்றியின் காரணமாக, இப்படம் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் மாபெரும் ஹிட்டானது. மேலும், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், சைனீஸ் மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெருவெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டில் `த்ரிஷ்யம் 2′ படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி […]

புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்.9 வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையடுத்து, அங்கு கடந்த 16ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே, தமிழகத்தில் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைக் கேட்டது போல், புதுச்சேரியில் திமுக கூடுதல் தொகுதிகள் கேட்டு வலியுறுத்தி வந்ததால், புதுச்சேரி கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து […]

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் – ஒப்பந்தம் கையெழுத்து

தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்களில் மந்தகதியில் செயல்பட்டு வந்த அரசியல் கட்சிகள் அப்பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், டிஆர் பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழு நடத்திய பேச்சுவார்த்தையில் […]

அமமுக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மந்தமாக இருந்த அரசியல் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைத்து அதில் தொகுதி பங்கீடு, அது தொடர்பான ஒப்பந்தம் என தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதே நேரம், அதிமுகவை பொறுத்தவரை எந்த கூட்டணி கட்சிக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்காத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் […]

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி – திருமா அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி, புதுச்சேரியில் ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்., மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு முதல் இக்கூட்டணியில் தொடர்ச்சியாக இருந்து வரும் விசிகவுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட இதரக் கட்சிகளைப் போன்று […]

© NewsTimeTN. All Rights Reserved.