உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மே.வங்க 2ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68% வாக்குப்பதிவு

மே.வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த 23ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் […]

மகாராஷ்டிரா சீரடி சாய்பாபா கோயிலில் விஜய் சாமி தரிசனம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் முறையாக களம் கண்டுள்ள நடிகர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்காக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]

திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு 1,100 சிறப்பு பேருந்துகள்

சித்ரா பவுர்ணமி நேரம் நாளை (வியாழக்கிழமை) இரவு 9.50 மணி முதல் வெள்ளிக்கிழமை (மே 1) காலை 11.07 மணி வரையிலாகும். இந்த நேரத்தில் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு அதிகளவில் பக்தர்கள் திரளக் கூடும் என்பதால், மாநிலம் முழுவதும் போக்குவரத்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் நோக்கி பக்தர்கள் அதிக அளவில் பயணம் செய்ய உள்ளதால், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பு சேவைகளை அறிவித்துள்ளன. அதன்படி, நாளை முதல் (ஏப்.30) முதல் […]

தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 50வது கூட்டம் டெல்லியில் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு வரும் மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீரை கர்நாடகம், தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் பிரச்சினையின்றி பகிர்ந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தலைவர், செயலாளர் மற்றும் 8 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கடந்த 2018ம் ஆண்டு அமைக்கப் […]

மே.வங்க 2ம் கட்ட தேர்தல் – மதியம் 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குப்பதிவு

மே.வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த 23ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் […]

மகாராஷ்டிராவில் வெப்ப தாக்கத்தினால் 109 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. இதனையொட்டி அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் வெப்பத்தாக்கத்தினால் மொத்தம் 39 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கோலா, நந்துர்பார் மற்றும் ரத்னகிரி ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மும்பை மாநகராட்சி பகுதியில் நேரடி வெப்பத்தாக்க பாதிப்புகள் ஏதும் […]

மே.வங்க 2ம் கட்ட தேர்தல் – 11 மணி நிலவரப்படி 39.79% வாக்குப்பதிவு

மே.வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக கடந்த 23ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மே.வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. 4வது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் […]

இன்று மாலை பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பு? – மத்திய அரசு விளக்கம்

அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தொடுக்கும் தாக்குதலினால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தானில் நடந்த முதல் கட்ட சமரச முயற்சியினால் போர் நிறுத்தம் ஏற்பட்ட போது கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால் 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்ததை அடுத்து இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் – லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, இன்று கோலாகலமான தேரோட்டம் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை வெகு சிறப்பாக நடந்தேறியது. திருக்கல்யாணத்திற்காக கோயில் வளாகத்திற்குள் வடக்கு – மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் ரூ.35 லட்சம் செலவில், 10 டன் எடையுள்ள பல வண்ண பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து […]

ஊட்டியில் மே 1 முதல் சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றான உதகையில் அதிக மக்கள் வருகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு அம்மாவட்ட காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உதகை கோடை விழாவை முன்னிட்டு, மே 1ம் தேதியிலிருந்து அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், சமையல் எரிவாயு கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் உதகை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதர கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 9 […]

© NewsTimeTN. All Rights Reserved.