திமுக அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம் – மு.க. ஸ்டாலின் பேச்சு

திமுகவின் அமைப்பு முறையில் மிகப் பெரிய மாற்றத்தை செய்ய இருப்பதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சி அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து […]
மகளிர் உரிமைத் தொகை நாளை வரவு வைக்கப்படாது – அரசு அறிவிப்பு

திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வந்தது. கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்ததுடன், தேர்தல் விதிகள் அமலுக்கு வரும் முன்பே மகளிர் வங்கி கணக்கில் 3 மாத மகளிர் உரிமைத்தொகையுடன் கோடை சிறப்பு நிதியாக சேர்த்து ரூ.5,000 […]
திமுக கூட்டணி கட்சிகள் தயவால் தவெக ஆட்சி – மு.க.ஸ்டாலின்

திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது, திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது, திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். மேலும், தொகுதி எண்ணிக்கை குறைவு, வாக்கு […]
அரசு தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்துக்கான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த உடன் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக, தமிழக அரசு […]
அதை மறந்துட்டீங்களா சி.எம். சார்? – முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து பேரவை நிகழ்வெல்லாம் முடிந்து, வீடு திரும்பிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு அவரது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்தார். முதலமைச்சரின் பதிலை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பேரவையில் […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி – கோலி சதமடித்து அசத்தல்

ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டி ராய்ப்பூரில் நேற்று, கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி அணிகள் இடையே நடந்தது. இந்த போட்டி மழை காரணமாக 75 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரஹானே 19, ஆலன் 18 ரன்னில் நடையை கட்ட, அங்கிரீஷ் ரகுவன்ஷி அதிரடியாக ஆடினார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த கேமரூன் கிரீன் 32 ரன்னில் […]
இபிஎஸ் – எஸ்.பி.வேலுமணி மோதல் – அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்கட்சி அந்தஸ்த்தையும் இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே 10 தோல்விகளை சந்தித்த நிலையில், தற்போதைய தோல்வியையும் சேர்த்து 11வது முறையாக அதிமுக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. அதன் பிறகு நடந்த ஆலோசனை கூட்டத்தில் தவெக ஆதரவு நிலைப்பாடு குறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோர் எடுத்து கூறிய போது, […]
தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை; அதற்கான போர்க்குணம் நமக்கே உரியது – மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும் என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் திமுக தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 2019-ஆம் ஆண்டிலிருந்து 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் எனத் […]