திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது.
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது, திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும், தொகுதி எண்ணிக்கை குறைவு, வாக்கு விகிதம் குறைவு உள்ளிட்டவை குறித்தும் கட்சியை அடிமட்ட அளவில் மறுசீரமைப்பது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இக்கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளும்படியும் அவர் தெரிவித்திருந்தார்.


