அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா

அம்பசாமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் வழங்கினார். நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், இன்று மேலும் ஒரு அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, இபிஎஸ் அணி […]
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, இபிஎஸ் அணி மற்றும் சிவிஎஸ் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சிவிஎஸ் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எஸ்பிவி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த அதிமுக எம்எல்ஏக்களில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், […]
தினமும் உயரும் பெட்ரோல், டீசல் விலை – 2 வாரங்களில் 5வது முறையாக உயர்வு

நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5வது முறையாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தையும் கவலையையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு விரும்பவில்லை. இந்த சூழலில் சமீபத்தில் 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும், மத்தியில் ஆளும் பாஜக […]
சென்னையில் 2 வாரங்களில் சிஎன்ஜி விலை மீண்டும் ரூ.2 உயர்வு

சென்னையில் கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக சிஎன்ஜி எரிவாயு விலை மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாடகை ஆட்டோ, கார் ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மேற்காசிய போர் காரணமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், […]
நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சிஎம் சார்? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தவெக அரசின் செயல்பாடு விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி; மாபெரும் நம்பிக்கை மோசடி. இது போன்ற நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா சிஎம் சார்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது தவெக அரசு. மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள், டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை […]