உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்த 3 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக, இபிஎஸ் அணி மற்றும் சிவிஎஸ் அணி என இரு பிரிவாக பிரிந்தது. இதில் சிவிஎஸ் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் அக்கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.

இதில் எஸ்பிவி தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்த அதிமுக எம்எல்ஏக்களில் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகிய மூவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தனர்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். அதிமுக ஏற்கனவே இரண்டு அணிகளாக பிரிந்து செயல்படும் நிலையில், எஸ்பிவி அணியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறுவது, அக்கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய தொகுதிகள் காலியானதாக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது.

இதனால், முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.