இனி நல்லதே நடக்கும் – தந்தை ராமதாஸ் உடனான சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி

தந்தை ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி “இனி நல்லதே நடக்கும்” என இருமுறை அழுத்தமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பாமக இரு அணிகளாக போட்டியிட்டது. ராமதாஸ், அன்புமணி மோதல் காரணமாக கட்சிக்குள் ஏற்பட பிளவால் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் தோல்விக்குபின் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்ததுடன் அன்புமணியை விமர்சிப்பதையும் அடியோடு நிறுத்தினார். அதே வேளையில், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காக அறிக்கை வாயிலாக குரல் […]
அவரே பாம் வைப்பாராம்… அவரே எடுப்பாராம் – வானதி சீனிவாசன் விமர்சனம்

பள்ளிகளை மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வதுதான் தவெகவின் கொள்கையா? எனக் கேள்வி எழுப்பிய பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், லோக்கல் திரைப்பட பாணியில் “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்’’ என்று கிண்டலடித்து விமர்சித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் தவெக சார்பில் அருகில் ஏற்பாடு […]
முதல்வரின் கோமாளித்தனத்தை பார்த்து சிரிப்பதா, அழுவதா? – வெளுத்து வாங்கிய மாஜி அமைச்சர்

தமிழக முதல்வராக விஜய் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரை மீதான உறுப்பினர்களின் விவாதம் நடந்தது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, ஆளுநர் உரையில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை மற்றும் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்து உரிய விளக்கங்கள் இல்லை என திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் […]
அடக்குமுறையை கையில் எடுத்தால் திமுக வேடிக்கை பார்க்காது – உதயநிதி எச்சரிக்கை

திமுக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுகவின் ‘GenZ DMK’ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி மாவட்டம் போடம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த காவல்துறை கைது செய்ய முயன்ற விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி […]
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெற புதிய கட்டுப்பாடு – மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கான ‘வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட’ விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தியமைத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) நிதி பெறுவதற்கான விதிமுறைகளை 2011ம் ஆண்டில் மத்திய அரசு வகுத்திருந்தது. தற்போது இந்த விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்து புதிய விதிமுறைகளுடன் அரசிதழ் அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டிற்கு முன்னதாகப் […]
தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,680 சரிவு

சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவை தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கமாகும். அதன் அடிப்படையிலேயே, தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் கொண்டு சென்றுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் […]