உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

அவரே பாம் வைப்பாராம்… அவரே எடுப்பாராம் – வானதி சீனிவாசன் விமர்சனம்

அவரே பாம் வைப்பாராம்… அவரே எடுப்பாராம் – வானதி சீனிவாசன் விமர்சனம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பள்ளிகளை மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வதுதான் தவெகவின் கொள்கையா? எனக் கேள்வி எழுப்பிய பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், லோக்கல் திரைப்பட பாணியில் “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்’’ என்று கிண்டலடித்து விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஞ்சிபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி நேரத்தில் தவெக சார்பில் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலமைச்சர் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்தி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், பள்ளிகளில் ரீல்ஸ், அரசு நிகழ்ச்சிகளில் டான்ஸ், உச்சபட்சமாக பள்ளி மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் சாங்ஸ் என கல்விக் கூடங்களை, அரசு நிகழ்ச்சிகளை ஒரு மினி ஷூட்டிங் ஸ்பாட்டுகளாக மாற்றி அரசியல் செய்வது தான் தவெக-வின் கொள்கையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பேட்டிகளில் திறமையாகப் பேசி மழுப்பும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இது போன்ற செயல்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல்தான் தவெக அரசின் செயல்பாடுகள் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்னும் சற்று லோக்கலாக திரைப்பட வசன பாணியில் சொல்லப் போனால் “அவரே பாம் வைப்பாராம்.. அவரே எடுப்பாராம்..!” என்று கூறும் வகையில் கட்சி நிர்வாகிகளிடம் இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தப்பட்ட பிறகும் கூட தொடர்வது எந்த வகையில் நியாயம் தவெக தலைவர் திரு. விஜய் அவர்களே?

தொடர்ந்து பள்ளிச் சிறார்களை டார்கெட் வைத்து அரசியல் செய்யும் இந்த வழக்கத்தை விட்டொழிக்க தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு கடுமையாக அறிவுறுத்தும்படி வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.