உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மத வன்முறையை தூண்டுவதே பாஜக நோக்கம்: ஸ்டாலின்

மத வன்முறையை தூண்டுவதே பாஜக நோக்கம்: ஸ்டாலின்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஏப்.18 தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி இல்லை; இனிமேல் கலீல் அகமதுவும் இல்லையா?

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க.

வன்முறை தவிர்த்து, வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க.

மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதை திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பாஜக அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க.

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பாஜகவும் அதனுடன் இணைந்துள்ள அதிமுகவும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான-கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஏப்.18 தமிழகத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

ஐபிஎல் தொடரில் இதுவரை தோனி இல்லை; இனிமேல் கலீல் அகமதுவும் இல்லையா?

© NewsTimeTN. All Rights Reserved.