மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள்

மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட குறைவாகவே அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பட்ஜெட்டில் நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையிலான புதிய ரயில்சேவை தொடங்கப்படும் […]
எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்தைப் பொறுத்தே, சமையல் எரிவாயு விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, எரிவாயு சிலிண்டர் விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பை மத்தியில் ஆளும் பாஜ அரசு கடந்த பல ஆண்டுளாக எண்ணெய் சந்தை நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களும் அரசுக்கு ஆதரவாக மாநில மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தாமல் பராமரிப்பது வழக்கமாகும். இந்நிலையில், ஓட்டல்கள், டீக்கடை உள்ளிட்ட […]
தைப்பூசம் – முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தமிழ் கடவுளாம் முருகனுக்கு உகந்த தைப்பூச நாளில் அறுபடை வீடுகளிலும் அதிகாலை முதலே பக்தர் சாமி தரிசனம் செய்தனர். தை மாத பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனை நினைத்து விரதம் மேற்கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்நாளை முருகப்பெருமான் ஞானவேல் பெற்று சூரபத்மனை வென்ற தீமை ஒழிந்த நாளாக கருதி, பக்தர்கள் விரதமிருந்தும், காவடி எடுத்தும், பால் குடம் சுமந்தும் மற்றும் அலகு குத்தி […]
நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு அமல்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, பான் மசாலா மீதான சுகாதார செஸ் வரியை 40% ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தி அறிவித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகள் விலை உயர்ந்துள்ளது. பில்டர் பொருத்தாத 65 மில்லி மீட்டர் உயர சிகரெட் […]
மக்களுக்கான எந்த திட்டமும் விஜயிடம் இல்லை – திமுக

சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 3ம் ஆண்டு தொடக்கவிழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது, திமுகவை விமர்சித்து கற்பனை திருக்குறள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்து திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், விஜய் பல கனவுகளிலும், கற்பனைகளிலும் இருக்கிறார். மக்களுக்கான எந்த திட்டத்தைப் பற்றியோ, கொள்கைகளை பற்றியோ அவர் எதுவும் சொல்லவில்லை. மக்கள் நலம் சார்ந்த விஷயங்களுக்கு […]
மத வன்முறையை தூண்டுவதே பாஜக நோக்கம்: ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க. வன்முறை தவிர்த்து, வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கமாக […]
தவெக 3ம் ஆண்டு விழா: கொடியேற்றினார் விஜய்

பிரபல நடிகர் விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்.2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பிப்.2ம் தேதி பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் விஜய் கட்சிக் கொடியை ஏற்றுவது வழக்கமாகும். இந்நிலையில், இன்று பிப்.2ம் தேதி தவெகவின் 3ம் ஆண்டு தொடக்கவிழா பனையூரில் களை கட்டியுள்ளது. தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் தோரணங்கள் கட்டப்பட்டு, மேள தாளத்துடன் கரகாட்டம், […]
ஜனாதிபதி உடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் அமைச்சர் நிர்மலா ஜனாதிபதியை சந்தித்தார். இந்த பட்ஜெட்டில் தொழில் துறையினருக்கு வரி குறைப்பு, பொருளாதார வளர்ச்சிக்கான அறிவிப்புகள், ஊக்குவிப்பு […]
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இது வரும் 13ம் தேதி முடிவடைகிறது. இதனையொட்டி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 29ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். […]
நான் ஏன் கிங் மேக்கரா இருக்கணும்? – விஜய் கேள்வி

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியான சூழலில், முடிவை தீர்மானிக்கும் கிங் மேக்கராக இருக்கப் போவதில்லை என தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு முதல் முறையாக ஆங்கில ஊடகமொன்றுக்கு சென்னையில் நேற்று பேட்டியளித்தார். பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், அவரை சந்தித்த ஊடகக் குழுவினர் அவருடனான 45 நிமிடத்துக்கும் மேலான நேர்காணலின் போது தவெக தலைவர் விஜய் பகிர்ந்து கொண்ட விவரங்களின் அடிப்படையில் அது குறித்து […]