ஆபரணத் தங்கத்தின் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே அதிகரித்து வந்தாலும், கடந்த மாதம் 29ம் தேதி வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த நாட்களில் சவரனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கலாவதற்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில், தங்கம் விலை குறைய தொடங்கியது. கடந்த 4 நாட்களில் (பட்ஜெட் தினத்தன்று எவ்வித மாற்றமுமின்றி) சவரனுக்கு ரூ.22,800 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600க்கு விற்பனையானது.
இதன் பிறகு, தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 240க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900க்கு விற்பனையாகிறது.
அதே போன்று, கடந்த 4 நாட்களில் ரூ.1.25 லட்சம் வரை விலைச் சரிவை கண்ட வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒருகிராம் ரூ.300க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.320 க்கு விற்பனையாகி வருகிறது.


